search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    டிஜிட்டல் பேனர்கள் வைக்க விதிமுறைகளை திருத்த வேண்டும்- ஐகோர்ட்டில் கோரிக்கை

    சென்னையில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க விதிமுறைகளை திருத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் டிஜிட்டல் பேனர் அச்சிடுவோர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    சென்னை:

    சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் என்ஜினீயர் பலியானார். மேலும் கோவை உள்ளிட்ட சில இடங்களில் பேனர்கள் விழுந்து விபத்துக்கள் நேரிட்டது.

    இதையடுத்து அரசியல் கட்சிகள் பேனர் வைக்க கோர்ட்டு தடை விதித்தது. இந்த நிலையில் டிஜிட்டல் பேனர் அச்சிடுவோர் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் முறையிட்டனர். இந்த வழக்கில் அவர்கள் சார்பில் வக்கீல் ஞானதேசிகன் ஆஜராகி வாதாடி வருகிறார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சத்ய நாராயணா, ஹேமலதா ஆகியோர் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஞானதேசிகன் வாதிடும் போது, விளம்பர பலகைகள் என்பது வேறு. டிஜிட்டல் பேனர்கள் என்பது வேறு.

    டிஜிட்டல் பேனர்கள் வைக்க ஆறு நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பிறப்பு, இறப்பு, சுப நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், விழா மேடைகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படும். இதற்கு தடை ஏதும் இல்லை. இருப்பினும் மாநகராட்சி அனுமதி மறுப்பதாக கூறினார்.

    இதற்கு என்ன காரணம் என்று நீதிபதிகள் அரசு தரப்பில் கேட்டனர். அதற்கு வருகிற 22-ந் தேதி அரசு தரப்பில் விளக்கம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் டிஜிட்டல் பேனர் வைப்பதை முறைப்படுத்த விதிமுறைகளை திருத்த சில பரிந்துரைகளை ஞானதேசிகன் முன் வைத்தார். அதில் பிரமாண்ட பேனர்களுக்கு தடை விதிக்கலாம். 10 முதல் 16 அடி வரை அனுமதிக்கலாம். சாலைகளில் சென்டர் மீடியனில் பேனர் வைக்கக்கூடாது. லைசென்சு வழங்கும் நடைமுறையை எளிமை படுத்த வேண்டும்.

    அரசு நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்க விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் கல்விக்கூடங்கள், கோவில்களையும் சேர்க்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இந்த பரிந்துரை அரசுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×