search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோசடி
    X
    மோசடி

    ஆன்லைன் லாட்டரி மூலம் திருச்சி வாலிபரிடம் பணமோசடி

    திருச்சியில் ஆன்லைன் லாட்டரி மூலம் வாலிபரிடம் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருச்சி:

    தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதனை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    இந்த நிலையில் திருச்சியில் ஆன்லைன் லாட்டரி மூலம் வாலிபரிடம் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி ஏர்போர்ட் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் டேவிட்ராஜ் (வயது 20), பெயிண்டரான இவர் அந்த பகுதியை சேர்ந்த ரெங்கசாமி (45) என்பவர் மூலம் கடந்த 26-ந்தேதி ஆன்லைன் மூலம் புத்தாண்டு சிறப்பு குலுக்கல் லாட்டரி பதிவு செய்தார். இதற்காக ரூ.150 வரை செலுத்தியுள்ளார். இதையடுத்து ரெங்கசாமி, டேவிட்ராஜ்க்கு லாட்டரி எண் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த எண்ணுக்கு ரூ.3ஆயிரம் பரிசு விழுந்துள்ளது.

    அதனை வாங்குவதற்காக டேவிட்ராஜ், ரெங்கசாமியை ஏர்போர்ட் வயர்லஸ் ரோடு சுப்பிரமணியார் திடல் அருகில் சந்தித்து பணத்தை கேட்டுள்ளார். ஆனால் ரெங்கசாமி பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ரெங்கசாமியை கைது செய்தனர். 
    Next Story
    ×