
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே எல்லன் கொட்டாய், மொத்தலூர் ராமாபுரம் ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் 296 ஓட்டுகள் 2 முறை பதிவு செய்யப்பட்டு ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக ஏணி சின்னத்தில் போட்டியிட்ட மாதப்பன் ஆதரவாளர்கள் புகார் கூறினார்கள்.
ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாகவும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று கூறியும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க முயன்றனர். மனுவை வாங்க மறுத்ததால் ஆன்லைன் மூலம் புகாரை பதிவு செய்துள்ளனர்.
மேலும் இன்று சென்னையில் தேர்தல் கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுக்க உள்ளனர்.
இந்த நிலையில் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் மாதப்பனின் ஆதரவாளர்கள் இன்று எல்லன்கொட்டாய், மொத்தலூர் ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.