search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் ஆய்வு செய்ததை படத்தில் காணலாம்.
    X
    கலெக்டர் ஆய்வு செய்ததை படத்தில் காணலாம்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் - கலெக்டர்கள் ஆய்வு

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு செய்தனர்.
    பெரம்பலூர்:

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2020-ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்த நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும் வருகிற 22-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிடப்பட்டுள்ளது.

    இதற்கான முதற்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நேற்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது. முகாமில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர்.

    இதில் பெரம்பலூர் தந்தை ரோவர் பள்ளியில் நடந்த முகாமினை கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், வாக்காளராக பதிவு செய்ய 18 வயது நிறைவுபெற்ற அனைவரும் அருகிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாமில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து முகவரி மற்றும் வயதுசான்றுடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்து தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. இவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை வருகிற 25-ந்தேதி தேசிய வாக்காளர் தின விழாவின்போது வழங்கப்படவுள்ளது என்றார்.

    இதே போல அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை கலெக்டர் ரத்னா நேரில் ஆய்வு செய்தார். இந்த முகாம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் வருகிற 11, 12-ந்தேதிகளிலும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×