search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாம்பனில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை படத்தி்ல் காணலாம்.
    X
    பாம்பனில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை படத்தி்ல் காணலாம்.

    பாம்பனில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணிகள் தீவிரம்

    பாம்பனில் புதிய ரெயில்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் கடலில் தூண்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில்வே பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாலம் பழமையான பாலமாக உள்ளதால் பாம்பன் கடலில் புதிதாக ரெயில் பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அதற்காக ரூ.250 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. கடந்த நவம்பர் மாதம் பூமி பூஜையுடன் பணி தொடங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து பாம்பன் பகுதியில் கடந்த 2 மாதமாக காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு, தொடர்ந்து பெய்த மழை ஆகியவற்றால் பாம்பனில் புதிய ரெயில் பாலத்திற்கான பணிகள் நடைபெறவில்லை.

    இந்தநிலையில் பருவமழை சீசன் முடிவதோடு, மழை பெய்வது நின்று விட்டதாலும், கடல் கொந்தளிப்பும் குறைந்ததால் பாம்பன் கடல் பகுதியில் புதிய ரெயில் பாலத்திற்கான ஆயத்த பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு மேலாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. பாம்பன் வடக்கு பகுதியில் ரெயில் பாலத்தை ஒட்டியுள்ள பகுதியல் புதிய ரெயில் பாலத்திற்காக தூண்கள் அமைக்கப்பட உள்ளன. அதற்காக கடற்கரை பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் சமதளப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது,பாம்பன் வடக்கு கடல் பகுதியில் புதிய ரெயில் பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணிகள் இன்னும் 10 நாட்களில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய ரெயில் பாலத்தின் பணிகளுக்காக ரெயில் பாலத்தை ஒட்டியுள்ள வடக்கு கடற்கரை பகுதியில் புதிய பாலத்திற்காக முதல் தூண்கள் கட்டுவதற்காக கடற்கரை பகுதியில் அதிவேக எந்திரம் மூலம் 30 மீட்டர் ஆழம் வரையிலும் தோண்டப்பட்டு தூண்கள் கட்டப்படவுள்ளன.

    கடலில் தோண்டி ஆழப்படுத்தி தூண்கள் அமைக்க 5 எந்திரங்கள் ஈடுத்தப்படவுள்ளன. புதிய பாலத்திற்காக மொத்தம் 330 தூண்கள் கட்டப்படவுள்ளன. ஒரே நேரத்தில் 2 ரெயில்கள் செல்லும் வகையில் இருவழிப்பாதை பாலமாகவே கட்டப்படவுள்ளது.

    2 வருடத்தில் புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.ரெயில் பாலத்தின் மைய பகுதியில் மின் மோட்டார் மூலம் திறந்து மூடும் வகையில் கண்காணிப்பு கேமரா மற்றும் தொலைதொடர்பு வசதிகளுடன் கூடிய தூக்குப்பாலம் கட்டப்படவுள்ளது என்று கூறினார்.
    Next Story
    ×