search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    ராசிபுரம், திருச்செங்கோட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ராசிபுரம், திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    ராசிபுரம்:

    அனைத்து இஸ்லாமிய ஜமாத்கள் மற்றும் உலமாக்கள், கூட்டணி கட்சிகள் இணைந்து, தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராசிபுரம் ஜாமியா பள்ளிவாசல் முத்தவல்லி சாகுல் அமீது தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் நெல்லை நயினார் முகமது, தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் நிறுவனர் நல்வினை செல்வன், தமிழக உலமா சபை நாமக்கல் மாவட்ட தலைவர் கோட்டை இப்ராகீம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஷேக் நவீத், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாச்சல் சீனிவாசன், ராசிபுரம் கிறிஸ்தவ பாதிரியார் ஜெயசீலன், எஸ்.டி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர் சபீக் அகமது, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சபீர், நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர், முன்னாள் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலு, அ.ம.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் ஆதவன் ஆகியோர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ராஜா முகமது உள்பட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து அனைத்து ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம்களும், தி.மு.க., கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் அனைத்து ஜமாத்தார்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்செங்கோடு டவுன் பெரிய பள்ளிவாசல் முத்தவல்லி முபாரக் அலி தலைமை தாங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளர் கோவை சாதிக் கண்டன உரையாற்றினார். மவுலவி அபுதாகிர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி மாநில பொருளாளர் பள்ளப்பட்டி யூனுஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாமக்கல் மாவட்ட தலைவர் முபீன், திருச்செங்கோடு முன்னாள் நகரமன்ற தலைவர் நடேசன், தி.மு.க. நகர பொறுப்பாளர் கார்த்தி, தி.மு.க.வைச் சேர்ந்த முத்து, காங்கிரஸ் நகர தலைவர் சர்வேயர் செல்வகுமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மணிவேல், திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த வைரவேல், ஆதித்தமிழர் பேரவை சேர்ந்த செல்வ வில்லாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.
    Next Story
    ×