search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்- 91 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது

    விருதுநகர் மாவட்டத்தில் 200 யூனியன் வார்டுகளுக்கான தேர்தலில் 193 இடங்களில் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க. 91 இடங்களில் வெற்றி பெற்றது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 யூனியன்களில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி மாவட்டத்தில் உள்ள யூனியன் மற்றும் வெற்றி பெற்றவர்களின் விவரம் வருமாறு:-

    வெம்பக்கோட்டை யூனியனில் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் 200 யூனியன் வார்டுகளுக்கான தேர்தலில் 193 இடங்களில் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க. 80 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., பா.ஜனதா தலா 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

    இதேபோல் தி.மு.க. 91 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க.-7, இ.கம்யூ.-2, த.ம.மு.க.-3, புதிய தமிழகம்-1, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்-1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

    சுயேட்சை வேட்பாளர்கள் 6 இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 20 பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளுக்கு 15 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 10 இடங்களில் அ.தி.மு.க.வும், 5 இடங்களில் தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன.

    விருதுநகர் யூனியனில் வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் விவரம் வருமாறு:-

    1-சோபனா ராஜூ (தி.மு.க.)

    2-சுமதி (அ.தி.மு.க.)

    3-சுந்தரபாண்டியன் (அ.தி.மு.க.)

    4-திவ்யா (தி.மு.க.)

    5-கருப்பசாமி ((அ.தி. மு.க.)

    7-ஈஸ்வரன் (அ.தி.மு.க.)

    8-ராமலட்சுமி (அ.தி. மு.க.)

    9-சரோஜா (அ.தி.மு.க.)

    10-வடிவுக்கரசி (அ.தி.மு.க.)

    11-சரஸ்வதி (தி.மு.க.)

    12-முருகேசன் (அ.தி. மு.க.)

    13-சினிபிரியா (தி.மு.க.)

    14-அமுதா (தி.மு.க.)

    15-மாலா (அ.தி.மு.க.)

    17-முத்துலட்சுமி (அ.தி. மு.க.)

    20-கலைச்செல்வி (தி.மு.க.)

    22-அழகம்மாள் (சுயே ட்சை)

    24-ராஜம்மாள் (அ.தி. மு.க.)

    6,18,21,23 வார்டுகளின் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

    விருதுநகர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    குறிஞ்சிமலர் (ஆமத்தூர்), முத்துலட்சுமி (எண்டப்புளி), சேது ராமலிங்கப்பாண்டியன் (ஒண்டிப்புலி), கணபதி (ஓ.கோவில்பட்டி), ஈஸ்வரி (கட்டனார்பட்டி), முத்துலட்சுமி (குருமூர்த்தி நாயக்கன் பட்டி), செல்வி (கூரைக்குண்டு), காளியம்மாள் (கோட்டநத்தம்), பூசம்மாள் (கோவில்வீரார் பட்டி).

    நாகலட்சுமி (சங்கரலிங்காபுரம்), ராதாதேவி (பாவாளி), காசிராஜன் (மருதநத்தம்), திருப்பதிசாமி (நீசலூர்), நாகராஜன் (முத்துலாபுரம்), தமிழரசி (ரோசல்பட்டி), சித்ரா (வள்ளியூர்), ஹரிபாஸ்கர் (முத்துராமலிங்கபுரம்), சித்ரகலா (வீரார்பட்டி), ராம லட்சுமி (வேப்பிலைப்பட்டி), பாண்டிலட்சுமி (குந்தலப்பட்டி).

    கிருஷ்ணமூர்த்தி (சிவஞானபுரம்), வேல்முருகன் (நக்கலக்கோட்டை), கஸ்தூரி (மேலச்சின்னையா புரம்), மருதராஜ் (சத்திரரெட்டியபட்டி), ரேணுகாதேவி (கோட்டையூர்), வைரவசாமி (எல்லங்க நாயக்கம்பட்டி), மங்களேஸ்வரி (புல்லலக்கோட்டை), முத்துலட்சுமி (பெரிய பேராளி), சரஸ்வதி (மூளிப்பட்டி), விஜயலட்சுமி (வடமலைக்குறிச்சி), ஜெகதீஸ்வரி (செங்குன்றாபுரம்), காளியம்மாள் (செங்கோட்டை).

    விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் வெற்றி விவரம் வருமாறு:-

    1-மகாலட்சுமி (அ.தி.மு.க.)

    2-வசந்தி (அ.தி.மு.க.)

    3-கணேசன் (அ.தி.மு.க.)

    4-வேல்ராணி (அ.தி. மு.க.)

    7-மச்சராஜா (அ.தி.மு.க.)

    10-புவனா (தி.மு.க.)

    11-தமிழ்வாணன் (தி.மு.க.)

    12-பாரதிதாசன் (தி.மு.க.)

    14-சிவக்குமார் (தி.மு.க.)

    15-முத்துலட்சுமி (தி.மு.க.)

    16-வேல்முருகன் (அ.தி.மு.க.)

    17-மகாலட்சுமி (அ.தி. மு.க.)

    18-மாலதி (அ.தி.மு.க.)

    19-சீனியம்மாள் (அ.தி. மு.க.)

    20-இந்திரா (அ.தி.மு.க.)
    Next Story
    ×