search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை சந்திப்பு
    X
    நெல்லை சந்திப்பு

    நெல்லை வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

    தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நெல்லை வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
    நெல்லை:

    மதுரை ரெயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் பயணிகள் பாதுகாப்பு மற்றும் பல்வேறு பராமரிப்பு பணிகள் இந்த மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி நெல்லை வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

    அதன்படி திருச்சி-திருவனந்தபுரம் இடையே நெல்லை வழியாக இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை 4, 5, 7-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை கோவில்பட்டி-திருவனந்தபுரம் இடையே இருமார்க்கத்திலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    திருச்செந்தூர்-பாலக்காடு பாசஞ்சர் ரெயில் வருகிற 5, 8, 12-ந் தேதிகளில் நெல்லை-மதுரை இடையே இருமார்க்கத்திலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 4, 7, 9, 10, 11-ந் தேதிகளில் நெல்லை-கோவில்பட்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதில் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் பாசஞ்சர் ரெயில் 5, 8, 12-ந் தேதிகளில் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4.05 மணிக்கு பதிலாக மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

    நெல்லை-ஈரோடு பாசஞ்சர் ரெயில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் 1 மணி நேரம் 55 நிமிடங்கள் சேலம் கோட்டத்துக்கு தாமதமாக சென்றடையும். இதுதவிர மதுரையில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை-பழனி பாசஞ்சர் ரெயில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இதையொட்டி 2 நாட்களும் காலை 6.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு காலை 10 மணிக்கு பழனி சென்றடையும்.

    இந்த தகவலை மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×