search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்தும் திமுக - மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை திமுகவினர் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருகிறது என அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
    சென்னை

    தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுக, திமுக என இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. 

    இதற்கிடையே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் மனு அளித்தார். அதில், தி.மு.க.வின் வெற்றியை தடுக்க சதி நடப்பதாக தெரிவித்தார்.

    இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தலைமையகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

    கூட்டம் முடிந்ததும், பொன்னையன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்துக்கு சென்றனர். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தி.மு.க.வினர் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருகிறது என புகார் அளித்தனர். அப்போது பேசிய பொன்னையன், மாநில தேர்தல் ஆணையம் மீது மு.க.ஸ்டாலின் வீண்பழி சுமத்துகிறார் என தெரிவித்தார்.
    Next Story
    ×