search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருமாவளவன் கோலம் வரைந்து போராட்டம் நடத்தினார்.
    X
    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருமாவளவன் கோலம் வரைந்து போராட்டம் நடத்தினார்.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருமாவளவன் கோலப் போராட்டம்

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோலம் வரைந்து போராட்டம் நடத்தினார்.
    சென்னை:

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக  நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் கோலம் போட்டு போராட்டம் நடத்தினார்.

    அவரின் 20 நிமிட முயற்சியில், 4 வண்ணத்துப்பூச்சிகளின் நடுவே No CAA என்ற எழுத்துகள் வரும் வகையில் அந்த கோலம் அமைந்திருந்தது. கோலத்தை தொடர்ந்து கண்டன முழக்கமும் எழுப்பப்பட்டது.

    பின்னர்  நிருபர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன், கோலமிடுவது, அறவழி போராட்டம் என்றார். பெண்கள்தான் கோலம் போட வேண்டுமென்ற பழைய எண்ணத்தை உடைப்பதற்காகவே தான் கோலம் போட்டேன். மார்கழி மாதத்தில் மிச்சமிருக்கிற நாட்களில், No CAA, NO MODI என கோல வழி எதிர்ப்பு போராட்டத்தை தொடர வேண்டும் என்றும் தமிழக மக்களை திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து, ஆங்கில புத்தாண்டு, தமிழர் திருவிழாவை விசிக புறக்கணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இதேபோல், சென்னையில் மகளிர் காங்கிரஸ் சார்பில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    Next Story
    ×