search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்குகள்
    X
    வழக்குகள்

    கோவை மாநகரில் போக்சோ சட்டத்தில் 28 வழக்குகள் - போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண்

    கோவை மாநகரில் போக்சோ சட்டத்தின் கீழ் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண் கூறினார்.
    கோவை:

    கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண் நிருபர்களிடம் கூறியதாவது:

    கோவை மாநகரில் கடந்த 2018-ம் ஆண்டு 1,136 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு 1,057 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. 2018-ம் ஆண்டு விபத்தில் 162 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு விபத்து இறப்பு 132 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

    மோட்டார் வாகன தடுப்பு சட்டத்தின்படி விதிமுறைகளை மீறியதாக கடந்த 2018-ம் ஆண்டு 5 லட்சத்து 16 ஆயிரத்து 304 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 6 லட்சத்து 46 ஆயிரத்து 737 வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதாக கடந்த ஆண்டு ரூ.9 கோடியே 55 லட்சத்து 64 ஆயிரத்து 810 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ. 13 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த ஆண்டு போலீஸ் இ.ஐ.எப் மூலம் ரூ. 63 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 730 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு 663 ஆக குறைந்து உள்ளது.

    திருட்டு தொடர்பாக 74 சதவீத வழக்குகள் கண்டு பிடிக்கப்பட்டு 77 சதவீத பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 112 வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு 89 ஆக குறைந்து உள்ளது.

    கோவை மாநகரில் போக்சோ சட்டத்தின் கீழ் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கோவை மாநகரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×