search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் மண் பானைகளை படத்தில் காணலாம்.
    X
    பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் மண் பானைகளை படத்தில் காணலாம்.

    சாணார்பட்டி அருகே பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் மண் பானைகள்

    சாணார்பட்டி அருகே பாறைப்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    கோபால்பட்டி:

    தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. பொதுமக்களும் பொங்கல் பண்டிகைக்கு தற்போதே தயாராகி வருகின்றனர். பல்வேறு இடங்களில் கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு உள்ளிட்ட பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு வர தொடங்கிவிட்டன. அதேபோல் பொங்கல் பானைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

    இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்புக்கு பெயர் பெற்ற சாணார்பட்டி அருகே பாறைப்பட்டி கிராமத்தில் பொங்கல் பானைகள் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சிறியது முதல் பெரியது வரை என பல்வேறு அளவுகளில் மண் பானைகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து பாறைப்பட்டியை சேர்ந்த ராஜா என்பவர் கூறியதாவது:-

    எங்கள் கிராமத்தில் 10-க் கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மண் பானைகளை ஆர்டர் முறையில் தயார் செய்து கொடுத்து வருகிறோம். ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு ஆர்டர் குறைந்துவிட்டது. இதுதவிர கடந்த 3 மாதங்களாக தொடர் மழை பெய்ததால் மண்பாண்ட தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களாக தான் மண் பானைகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். அதுவும் பொங்கல் பண்டிகை என்பதால் மண் பானைகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    பாறைப்பட்டியில் தயார் செய்யப்படும் பொங்கல் பானைகள் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கும், கேரளாவிற்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சிலர் மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். பானை விலை அதன் அளவை பொறுத்து ரூ.70 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழக மக்கள் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில் பொங்கல் தினத்தன்று மட்டுமாவது வீடுதோறும் தவறாமல் மண் பானையில் பொங்கல் வைப்பதை வழக்கமாக்கினால் மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×