search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து திமுக மகளிர் அணியினர் தங்களது வீட்டு முன்பு கோலம் வரைந்து இருந்தனர்.
    X
    குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து திமுக மகளிர் அணியினர் தங்களது வீட்டு முன்பு கோலம் வரைந்து இருந்தனர்.

    கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மகளிர் அணியினர் கோலம்

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தி.மு.க. மகளிரி அணையினர் வீட்டின் முன்பு கோலமிட்டனர்.
    கோவை:

    மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில், பெண்கள் கோலம் போட்டு குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிரணியினர் கோலம் போட்டு எதிர்ப்புகளை தெரிவிக்க உத்தரவிட்டார்.

    இதனையடுத்து கோவை, தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள சுண்டப்பாளையத்தில், மாநகர் மாவட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முன்பு குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் கோலமிட்டு இருந்தனர். இது குறித்து மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி கூறியதாவது,

    குடியுரிமை திருத்த சட்டத்தால் ஈழத்தமிழர்கள், சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு எங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளோம். இந்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×