search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தி.மு.க பிரமுகர் பலி

    தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தி.மு.க பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் மேலமுஸ்லிம் தெருவை சேர்ந்தவர் சாதிக் பாட்சா. இவர் தி.மு.க பிரமுகர். இவருடைய மனைவி நிலோபர். வல்லம் பேரூராட்சி 9-வது வார்டு முன்னாள் உறுப்பினராவார். சாதிக் பாட்சா அவருடைய மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வல்லம் திருச்சி சாலையில் உள்ள திருமண மண்டபத்தை புக் செய்திருந்தார். சம்பவத்தன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சாலையின் இரு புறங்களிலும் தி.மு.க கொடி கட்டிய கம்புகள் நடப்பட்டு மண்டப நுழைவு வாயிலில் அலங்காரம் செய்யப்பட்டு வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

    சம்பவத்தன்று திருமண மண்டபத்தில் காலை சமையல் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. இதற்காக திருமண மண்டபத்திற்கு லோடு ஆட்டோவில் விறகு ஏற்றி செல்லப்பட்டது. லோடு ஆட்டோவுக்கு பின்னால் சாதிக் பாட்சா மொபட்டில் வந்துள்ளார். திருமண மண்டபம் எதிரே அவர் வந்த போது சாலையில் வலது பக்கமாக மண்டப நுழைவு வாயிலில் உள்ளே செல்வதற்காக மொட்டை திருப்பி உள்ளார்.

    அப்போது அதே சாலையில் அவருடைய மொபட்டுக்கு பின்னால் 3 பாலிடெக்னிக் மாணவர்கள் வந்த மொபட் திடிரென படுவேகமாக மோதியது. இதில் நிலை தடுமாறிய சாதிக்பாட்சா சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு காதில் ரத்தம் வழிந்தது. மொபட்டில் வந்த மூன்று மாணவர்களும் கீழே விழுந்தனர். இதில் மொபட்டை ஓட்டி வந்த தஞ்சை கொடிமரத்து மூலை பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் பிரிதிவ் ராஜ் (வயது 19) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.

    உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த சாதிக் பாட்சாவுக்கும், கை முறிந்திருந்த மாணவர் பிரிதிவ் ராஜீக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சாதிக்பாட்சா மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வல்லம் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×