search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரிய வெங்காயம்
    X
    பெரிய வெங்காயம்

    மானியத்தில் விதை பெற்று பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய அதிகாரி வேண்டுகோள்

    மானியத்தில் விதை பெற்று பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    கரூர்:

    பெரிய வெங்காயம் சாகுபடி ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் 550 கிலோ விதை இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பெரிய வெங்காயம், விதை மூலமாக மட்டுமே சாகுபடி செய்ய முடியும் என்பதால் சிறிய வெங்காய சாகுபடிக்கு விவசாயிகள் மாறிவிட்டனர். தற்போது மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட மழை பாதிப்பு போன்ற காரணங்களால் பெரிய வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு கிலோ ரூ.130 வரை விலை உயர்ந்துள்ளது இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழகத்தில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்தால் இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு கிலோ விதை ரூ.1,200-க்கு விற்கப்படுகிறது. கரூர் மாவட்டத்திற்கு 135 ஏக்கரில் பயிரிட 550 கிலோ விதை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    எனவே வெங்காயம் சாகுபடி செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் நில ஆவனங்களான சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பெரிய வெங்காய விதைகளை பெற்று பயன் பெறலாம். வட்டார வாரியாக தோட்டக்கலை உதவி இயக்குனர் அவர்களின் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். கரூர் மற்றும் தாந்தோணி ராஜவேலு 9751678794, அரவக்குறிச்சி ஆ.கவிதா 9790107117, க.பரமத்தி கூ.தமிழ்ச்செல்வி 9843643170, கிரு‌‌ஷ்ணராயபுரம் சாகுல் இம்ரான் அலி 9994629884, குளித்தலை கலா 9843196095, தோகைமலை பிரேமா 9750262060, கடவூர் தமிழ்செல்வி 9445117941 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×