search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கருங்குளம் யூனியனில் வாக்குச்சீட்டை மாற்றி மடித்ததால் பரபரப்பு - அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்

    தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் யூனியனில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குச்சீட்டை மாற்றி மடித்ததால் ஏற்பட்ட பரபரப்பையடுத்து அந்த சாவடியில் அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் யூனியன் கலியாவூர் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    சுமார் 8.45 மணி அளவில் ஒரு வாக்குச்சாவடி அலுவலர் வாக்குச்சீட்டை தவறுதலாக மடித்து கொடுத்து இருப்பதை வாக்குச்சாவடி முகவர்கள் பார்த்தனர். இதனால் ஒருவருக்கு வாக்களித்துவிட்டு சீட்டை மடிக்கும் போது, அந்த மை வேறு சின்னத்திலும் விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் செல்லாத ஓட்டுகளாக மாறிவிடும் என்று புகார் தெரிவித்தனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் அலுவலர்கள் விரைந்து சென்றனர். அப்போது, வாக்குச்சீட்டை மாற்றி மடித்தாலும், ஓட்டு போடும் முத்திரையில் உள்ள அம்புகுறி இடதுபுறம் நோக்கி இருக்கும். அதனை மடித்து மற்றொரு சின்னத்தில் சீல் பதியும் போது, முத்திரையில் உள்ள அம்புகுறி வலது புறம் நோக்கி இருக்கும்.

    ஆகையால் இடது புறம் நோக்கி இருக்கும் முத்திரை எந்த சின்னத்தில் பதிவாகி இருக்கிறதோ, அந்த சின்னத்துக்கு ஓட்டு சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பேரில் 9.20 மணிக்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் சுமார் 35 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு இருந்தது.

    புதுக்கோட்டை பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது, ஒரு ஆட்டோவில் 2 அண்டாவில் பிரியாணியை சிலர் கொண்டு வந்தனர். உடனடியாக போலீசார் அந்த பிரியாணியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வாகைகுளத்தில் உள்ள ஒரு கடையில் இருந்து தயார் செய்து புதுக்கோட்டை பகுதியில் தேர்தல் பணியில் உள்ள முகவர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×