search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர் செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர் செல்வம்

    முதல்வர், துணை முதல்வர் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்- ஜி.கே.வாசன் பாராட்டு

    நிர்வாகத்திறனில் தமிழகம் முதலிடம் என்பது முதல், துணை முதல்வர் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டியுள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் பட்டியலில் நாட்டிலேயே நிர்வாகத்திறனில் தமிழகம் 5.62 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது.

    முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா ஆசியோடு நடைபெறுகின்ற அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்திற்கு பேரும், புகழும் கிடைக்கின்ற வகையில் நிர்வாகத் திறனில் முதல் இடம் பெற்றிருக்கிறது. தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மேற்கொண்ட கடின உழைப்பிற்கும், உயர் பணிக்கும் கிடைத்திருக்கின்ற அங்கீகாரமாக இதை நான் கருதுகிறேன்.

    குறிப்பாக பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் அடிப்படையில் நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம் பெற்றிருப்பது பெருமையாக இருக்கிறது. அதாவது சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளிலும், சட்டம் ஒழுங்கிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இப்படி தமிழகம் நிர்வாகத்தில் முதலிடம் பெறுவதற்கு பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்ததற்கு காரணமாக இருந்த அந்தந்த துறையின் அமைச்சர், உயர் அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோரது பணிகளும் பாராட்டுக்குரியது.

    தமிழகம் நிர்வாகத் திறனில் சிறந்து விளங்குவதால் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், வளர்ச்சிப் பணிகள், பாதுகாப்பு போன்றவை பூர்த்தி செய்யப்பட்டு, மக்கள் நலன் காக்கப்பட்டு, மாநிலமும் வளம் பெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நம் நாட்டில் பொதுமக்களின் பயணத்திற்கும், சரக்குப் போக்குவரத்துக்கும் விமானப் போக்குவரத்து பெரும் பயனுள்ளதாக இருப்பதால் அதன் கட்டணத்தை அவ்வப்போது அதிகமாக உயர்த்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

    சென்னையிலிருந்து திருவனந்தபுரம், மதுரை, பெங்களூரு செல்வதற்கான பயணக் கட்டணமும் ரூபாய் 10 ஆயிரம் வரை உயர்ந்துள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். இப்படி பயணக்கட்டணம் உயர்த்தப்பட்டால் விமான நிறுவனங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கலாம். ஆனால் நடுத்தர மக்களின் அவசர கால விமானப் பயணம் கேள்விக்குறியதாக மாறிவிடும்.

    விமானப் பயணம் என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமல்ல அவசர, அவசிய காலங்களில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். பெரும்பாலும் பேருந்துகளிலும், ரெயில்களிலும் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் எப்போதாவது விமானத்தில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் விமானப் பயணக் கட்டணம் அவர்களுக்கு பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்று கூறி இருக்கிறார்.
    Next Story
    ×