search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்ல தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில் அறிவித்துள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    * சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-பிலாஸ்பூர்(வண்டி எண்: 06043) இடையே இயக்கப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற 27-ந்தேதி மதியம் 2.40 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

    * நெல்லை-தாம்பரம்(82602) இடையே இயக்கப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற ஜனவரி மாதம் 5-ந்தேதி மாலை 6.15 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

    * சென்னை எழும்பூர்-நெல்லை(06001) இடையே இயக்கப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற ஜனவரி மாதம் 3-ந்தேதி எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6.50 மணிக்கு புறப்படும்.

    * எர்ணாகுளம்-வேளாங்கண்ணி(06015) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற ஜனவரி மாதம் 4, 11, 18, 25-ந்தேதி, பிப்ரவரி மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதி, மார்ச் மாதம் 7, 14, 21, 28-ந்தேதி எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு இயக்கப்படும்.

    * வேளாங்கண்ணி-எர்ணாகுளம்(06016) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற ஜனவரி மாதம் 5, 12, 19, 26-ந்தேதி, பிப்ரவரி மாதம் 2, 9, 16, 23-ந்தேதி, மார்ச் மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளில் மாலை 6.15 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

    * சென்டிரல்-சந்திரகாச்சி(06058) இடையே இயக்கப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற ஜனவரி மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதி, பிப்ரவரி மாதம் 5, 12, 19, 26-ந்தேதி சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 3.15 மணிக்கு புறப்படும்.

    * சென்டிரல்-செகந்திராபாத் இடையே இயக்கப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற ஜனவரி மாதம் 3, 5, 10, 12, 17, 24, 26, 31-ந்தேதி, பிப்ரவரி மாதம் 2, 7, 9, 14, 16, 21, 23, 28-ந்தேதிகளில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×