search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கும்பகோணத்தில் மதுபாட்டில், சாராயம் விற்ற 5 பேர் கைது

    கும்பகோணத்தில் மதுபாட்டில், சாராயம் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் பகுதிகளில் வெளிமாநில சாராயம், கஞ்சா, மதுபாட்டில் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். அப்போது கும்பகோணம் சிங்காரத்தோப்பு சுடுகாடு அருகில் வெளிமாநில சாராயம் வைத்து விற்பனை செய்த பிரம்மன்கோயில் அரசலாறு வழிநடப்பை சேர்ந்த கணேஷ்குமாரை (வயது 37) கைது செய்து அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஜான் செல்வராஜ் நகரில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த திருவாரூர் மாவட்டம் திருவிழிமிழலையை சேர்ந்த கண்ணதாசனை (27) கைது செய்தனர். இதைதொடர்ந்து பெருமாண்டி முனியாண்டி கோயில் அருகில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த காமராஜ் நகரை சேர்ந்த ரவி (எ) ரவிக்குமாரை (35) கைது செய்தனர். மேலும் அதே பகுதியில் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் நின்றவர் திடீரென இறங்கி ஓடினார். இதையடுத்து பைக்கை சோதனை நடத்தியபோது 250 கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள், கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் தப்பியோடிய முகம்மது ரபீக்கை தேடி வருகின்றனர்.

    இதேபோல் தாராசுரம் சுடுகாட்டில் மதுபாட்டில் விற்பனை செய்த எலுமிச்சங்காபாளையம் மாணிக்கம் (45) என்பவரையும், தேவனாஞ்சேரி மண்ணியாற்றின் கரையில் மதுபாட்டில் விற்பனை செய்த திருவாய்ப்பாடியை சேர்ந்த வினோத் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய கஞ்சா வியாபாரி, கும்பகோணத்துக்குள் சாராயம் கொண்டு வரும் முக்கிய நபர்கள், உடந்தையாக இருப்பவர்கள் குறித்து கும்பகோணம் உட்கோட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×