search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பருப்பு வியாபாரத்தில் ரூ.59.43 லட்சம் மோசடி வழக்கில் கணவன்-மனைவி கைது

    தூத்துக்குடியில் பருப்பு வியாபாரத்தில் ரூ.59.43 லட்சம் மோசடி செய்த வழக்கில் கணவன்-மனைவியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முனியசாமிபுரத்தை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 39). இவர் போல்பேட்டையில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தூத்துக்குடியில் உள்ள 2 தனியார் நிறுவனங்களுடன் வணிகரீதியாக தொடர்பு வைத்து இருந்தாராம்.

    இந்த நிலையில் அமர்நாத், கடலை பருப்பு, பட்டாணி பருப்பு வாங்குவதற்காக தனியார் நிறுவனங்களை சேர்ந்த செல்வக்குமார், அவரது மனைவி முருகலட்சுமி ஆகியோரிடம் ரூ.6 கோடியே 56 லட்சத்து 88 ஆயிரத்து 208 கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவர்கள், ரூ.6 கோடியே 1 லட்சத்து ஆயிரத்து 403 மதிப்பிலான பட்டாணி பருப்பு, கடலை பருப்பை கொடுத்து உள்ளனர்.

    மேலும் அவர்கள் கடந்த 6-5-19 முதல் 4-11-19 வரை அமர்நாத்திடம் இருந்து பட்டாணி பருப்பு கொள்முதல் செய்த தொகை ரூ.3லு லட்சம் சேர்த்து என மொத்தம் ரூ.59 லட்சத்து 43 ஆயிரத்து 925 நிலுவையில் இருந்தது. இதனை அமர்நாத் திருப்பி தருமாறு கேட்டார்.

    அப்போது ஆத்திரம் அடைந்த செல்வக்குமார், முருகலட்சுமி ஆகியோர் அமர்நாத்தை மிரட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், செல்வக்குமார், முருகலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×