search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமகோபாலன்
    X
    ராமகோபாலன்

    மதம் மாறிய இந்துக்களை தாய் மதத்துக்கு அழைத்து வருவோம்- ராமகோபாலன் பேட்டி

    திருச்சியில் இந்து முன்னணி சார்பில் இந்து விரோத முறியடிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய ராமகோபாலன், மதம் மாறிய இந்துக்களை தாய் மதத்துக்கு அழைத்து வருவோம் என்றார்.

    திருச்சி:

    திருச்சி கோட்ட இந்து முன்னணி சார்பில் இந்து விரோத முறியடிப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தலைமை தாங்கி மாநில தலைவர் சுப்பிரமணியம் பேசுகையில், குடியுரிமை சட் டத்தை நாத்திகர்கள், கம்யூ னிஸ்ட் எதிர்க்கின்றனர். ஏமன் நாட்டில் பகவத் கீதை படிக்கிறார்கள். சவுதி, அரபு அமீரகத்தில் இந்து கோ‌ஷம் எழுப்புகிறார்கள். அங்கே இந்துக்களுக்கு மோடியே பாதுகாப்பு என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர் என்றார்.

    நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் பேசுகையில், குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளாகவும் அவர்களின் கைக்கூலிகளாகவும் இருக்கிறார்கள். போராட்டத்தை தூண்டி விடும் எவரும் தேசியவாதிகள் இல்லை. குடியுரிமை சட்ட திருத்தத்தை இந்து முன்னணி முழு மனதுடன் வரவேற்கிறது. நாம் இழந்த நிலப்பரப்பை மீட்போம். இழந்த இந்துக்களை மீட்போம். பாகிஸ்தான், வங்க தேசத்தை மீட்டு அகண்ட பாரதம் அமைக்கப்பட வேண்டும்.

    மதம் மாறிய இந்துக்களை தாய் மதத்திற்கு அழைத்து வருவோம். இழந்த கோவில்களை மீட்க வேண்டும். பாரத நாட்டை இந்து நாடாக அறிவிக்க வைக்க வேண்டும், அதற்காக உயிரே போனாலும் பரவாயில்லை. இந்த கோரிக்கைகளை முன் வைத்து இந்து முன்னணி பயணம் தொடரும் என்றார்.

    கூட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்தி, தேசவிரோத பயங்கரவாதிகளை வெளியேற்ற வேண்டும். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சன்னதிக்கு சொந்தமான நந்த வனத்தை ஆக்கிரமித்து கபளீகரம் செய்ய சில நிறுவனங்கள் முயற்சி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    கோர்ட்டு உத்தரவுப்படி மாணிக்க விநாயகர் சன்னதிக்கு செல்லும் வழியில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும். கோவில் நிர்வாகத்தை அலட்சிய போக்குடன் நடத்தும் பூலோகநாதர் கோவில் அறநிலையத்துறை நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரியமங்கலம் சர்ப்ப நதியை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நதியை மீட்க வேண்டும். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் அன்னதானம் செய்ய கட்டுப்பாடுகளை விதித்துள்ள உதவி கமி‌ஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புள்ளம்பாடி அருகே உள்ள ஆலம்பாக்கத்தில் பூட்டியே கிடக்கும் கைலாசநாதர் கோவிலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×