search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின் பேட்டி அளித்த காட்சி.
    X
    முக ஸ்டாலின் பேட்டி அளித்த காட்சி.

    திட்டமிட்டபடி நாளை திமுக பேரணி நடைபெறும் - மு.க.ஸ்டாலின்

    திட்டமிட்டபடி நாளை திமுக பேரணி நடைபெறும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின், நாளை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். திமுகவுடன் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்கும்  என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் நாளை நடைபெற உள்ள திமுக தோழமைக் கட்சிகளின் பேரணிக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

    இந்திய மக்கள் மன்றத்தின் வாராகி என்பவர் தொடர்ந்த மனு அவசர வழக்காக இன்று இரவு 8 மணிக்கு விசாரிக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நீதிமன்றத்தில் விடுமுறைக்கான சிறப்பு அமர்வில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

    பின்னர் நீதிபதிகள் அளித்த உத்தரவில், காவல்துறை சொன்ன நிபந்தனைகளை திமுக ஏற்றால், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணிக்கு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சனை? ஜனநாயக நாட்டில் போராட்டம், ஆர்ப்பாட்டத்தை யாரும் தடுக்க முடியாது; போராட்டத்தின் போது விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்சிகளின் கடமை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது என்ற நிபந்தனையுடன் திமுக பேரணிக்கு அனுமதி வழங்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.
    ஐகோர்ட்
    இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக கூட்டணி சார்பில் நாளை பேரணி நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் திமுக பேரணியை தடுக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டுள்ளது என்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான நாளை நடைபெறும் பேரணிக்காக மிகப்பெரிய விளம்பரத்தை அதிமுக அரசு எங்களுக்கு செய்து கொடுத்துள்ளது. அதற்காக நன்றி கூற விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×