search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
    X
    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    திமுக விரித்த வலையில் சிக்காமல் கமல்ஹாசன் தப்பிவிட்டார் - ஆர்.பி.உதயகுமார்

    திமுக விரித்த வலையில் சிக்காமல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தப்பிவிட்டதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், வரும் 23 ஆம் தேதி குடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். திமுகவுடன் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்கும்  என்று  தெரிக்கப்பட்டது.

    இதையடுத்து திமுக கட்சி சார்பில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து, போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
     
    ஆனால் கமல்ஹாசன் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதால் சென்னையில் டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மதுரையில் இன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். 
    கமல்ஹாசன்
    அப்போது அவர், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும், மக்களின் அமைதியை சீர்குலைக்கவே, திமுக பேரணி நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

    மேலும் "திமுக விரித்த வலையில் சிக்காமல் கமல் தப்பிவிட்டார்” என்றும் அவர் கூறினார்.
    Next Story
    ×