search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருப்பத்தூர் அருகே தொழிலாளியை கொன்று வீசிய தம்பி உள்பட 2 பேர் கைது

    திருப்பத்தூர் அருகே சொத்து தகராறில் தொழிலாளியை கொன்று வீசிய தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

    திருப்பத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்தனபள்ளி அருகே உள்ள பெரிய ஜெட்பள்ளம் கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 40). கல் உடைக்கும் தொழிலாளி. இன்னும் திருமணம் ஆகவில்லை.

    திருப்பத்தூர் அருகே உள்ள உடையாமுத்தூர் கல்லுக்குட்டை கிராமத்தில் கடந்த 9-ந் தேதி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    திருப்பத்தூர் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அவரது செல்போன் எண் மூலம் விசாரணை நடத்தியதில் வெங்கடேசனின் தம்பி குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் சொத்து தகராறில் வெங்கடேசன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது தம்பி குமாருக்கும், வெங்கடேசனுக்கும் சொத்து தகராறு ஏற்பட்டது.

    இதில் குமார், அவரது மாமா திருப்பத்தூர் பேராம்பட்டை சேர்ந்த சிங்காரம் (35), நண்பர் கார்த்தி (28) ஆகியோருடன் சேர்ந்து வெங்கடேசனை உடையாமுத்தூருக்கு அழைத்து வந்து கொன்று வீசியுள்ளனர். போலீசார் குமார், சிங்காரத்தை கைது செய்தனர். கார்த்தியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×