search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் - கமல்ஹாசன் அறிவிப்பு

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் கண்டிப்பாக பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இதில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் வருகிற 23-ந்தேதி பேரணி நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

    சென்னையில் நேற்று பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனிடம், தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் நடத்தும் பேரணியில் நீங்கள் பங்கேற்பீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு அவர், ‘காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் என்னால் பங்கேற்க முடியாது. ஆனால் மக்கள் நீதி மய்யம் கண்டிப்பாக பங்கேற்கும்’ என்றார்.
    Next Story
    ×