search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல்லில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்தபடம்.
    X
    நாமக்கல்லில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்தபடம்.

    ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து நேற்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    இந்திய தொழில் வணிகத்தை முற்றிலும் சீரழிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்தும், தடை செய்ய வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயகுமார் வெள்ளையன் வரவேற்று பேசினார்.

    இதில் நகை வியாபாரிகள் சங்கம், மருந்து வணிகர்கள் சங்கம், செல்போன் கடை உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது உள்நாட்டு வணிகத்தை பாதுகாத்திட வேண்டும். ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வேண்டும். சில்லரை வணிகத்தை காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

    இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில, மாவட்ட நிர்வாகிகள், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, வேலகவுண்டம்பட்டி, வெண்ணந்தூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி, வளையப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.
    Next Story
    ×