search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கோவை பாரதி பூங்காவில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 3 வாலிபர்கள் கைது

    கோவை பாரதி பூங்காவில் இன்று அதிகாலை சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவையில் அரசுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான வீடுகளில் ஏராளமான சந்தன மரங்கள் வைத்து வளர்க்கப்படுகின்றன.

    ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, கோவைப்புதூர் மருதமலை அடிவாரம் போன்ற பகுதிகளில் வைத்து வளர்க்கப்படும் சந்தன மரங்களை சில கும்பல் குறி வைத்து வெட்டி கடத்தி சென்றனர். இவர்களை பிடிக்க கோவை மாநகர குற்றப்பிரிவு சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்ற 6 பேரை கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்தும் சந்தனமரங்களை வெட்டி கடத்தி செல்லும் சம்பவம் நடந்து வந்தது. இதனை தடுக்கவும், சந்தன மரங்களை வெட்டி கடத்தி செல்லும் கும்பலை பிடிக்கவும், மாநகர போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் சாய்பாபா காலனி அருகே உள்ள பாரதி பார்க்கில் சந்தன மரங்களை வெட்டி கடத்தி செல்லும் கும்பலை சேர்ந்த 3 பேர் நுழைந்தனர்.

    அவர்கள் அங்கு வளர்க்கப்பட்டு வந்த 15 வருடம் பழமையான சந்தன மரத்தை வெட்டினர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற சாய்பாபா காலனி போலீசார் பூங்காவில் இருந்து மரம் வெட்டும் சத்தம் கேட்பதை கேட்டு ரோந்து வாகனத்தை நிறுத்தி விட்டு பூங்காவுக்குள் சென்றனர்.

    அப்போது அங்கு சந்தனமரத்தை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டுவதை பார்த்தனர். போலீசாரை கண்டதும் அந்த 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். இதனை பார்த்த போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள், மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தும் மோட்டார், அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 21), அன்பு (26), விஷ்ணு (26) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×