search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருப்பூரில் கோர்ட்டு பணியாளருக்கு இடையூறு ஏற்படுத்திய 7 பேர் கைது - நீதிபதி அதிரடி நடவடிக்கை

    திருப்பூரில் கோர்ட்டு ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 7 பேரை கைது செய்ய நீதிபதி வடக்கு போலீசுக்கு உத்தரவிட்டார்.
    திருப்பூர்:

    பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கோவை, தாராபுரம் நீதிபதி, வக்கீல் மற்றும் போலீஸ் துறையினரை அவதூறாகவும், ஆட்சேபனைக்குரிய வகையில் கடந்த செப்டம்பர் 13-ந்தேதி தகவல்களை வெளியிட்டனர். இது குறித்து நீதிபதி போலீசில் புகார் செய்தார்.

    திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவதூறு பரப்பியதாக திருப்பூர் புதுக்காலனியை சேர்ந்த நாஞ்சில் கிருஷ்ணன், உடுமலை ராம்மோகன், தாராபுரம் மூலனூரை சேர்ந்த வித்யா ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை. இதுகுறித்தான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது கைது செய்யப்பட்ட 3 பேரின் எப்.ஐ.ஆரை கேட்டு கோர்ட்டு ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

    இதனையடுத்து நீதிபதி சுந்தர்ராஜன் கோர்ட்டு ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 7 பேரை கைது செய்ய திருப்பூர் வடக்கு போலீசுக்கு உத்தரவிட்டார்.

    இதனையடுத்து திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பழனிக்குமார் (வயது 34), நாகராஜன் (45), விஜயகுமார் (50), சிவக்குமார் (41), சரவணன் (25), ராக்கிமுத்து (41), சுப்பிரமணியன் (43) ஆகிய 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×