search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்தது ஏன்?: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

    பிரதமரும், உள்துறை மந்திரியும் இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லை என்று கூறியதால் குடியுரிமை திருத்த மசோதாவை நாங்கள் ஆதரித்தோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
    சென்னை :

    சென்னை ராயபுரத்தில் தமிழக அரசின் சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு 1,935 பேருக்கு தாலிக்கு தங்கத்துடன், தனது சொந்த செலவில் புடவைகளையும் வழங்கினார்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் 2021-ல் கட்சி ஆரம்பிப்பது சந்தேகமே?. கராத்தே தியாகராஜனும், தமிழருவி மணியனும் அவரை எப்படியாவது அரசியலுக்கு இழுத்து வந்துவிடவேண்டும் என பேசுகிறார்கள். யார் கட்சி ஆரம்பித்தாலும் சரி, எந்த இயக்கம் என்றாலும் எங்களை மிஞ்ச யாரும் இல்லை என்பதை நான் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

    தி.மு.க.வுக்கு பிடிக்காத வார்த்தை தேர்தல். 2021 தேர்தலுக்கு பிறகு தி.க.வைப்போல் தி.மு.க.வும் பகுத்தறிவு கொள்கைகளை விளக்கும் ஒரு இயக்கமாக மாறிவிடும். இதனால்தான் தேர்தலை எப்படியாவது நிறுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தை நாடினர். அங்கு தலையில் குட்டு விழுந்தது. 17 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த அவர்கள், தமிழக மக்களுக்காக என்ன செய்தார்கள்?.

    நாங்கள் தி.மு.க.வை பற்றி பேசினால் அவர்கள் தனிப்பட்ட முறையில் எழுதுவதும், பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாங்கள் ஒன்றும் கோழைகள் அல்ல.

    இலங்கை தமிழர்களுக்கு தேவை இரட்டை குடியுரிமைதான். ஜெயலலிதா காலத்திலேயே நாங்கள் பொதுக்குழுவில் இதுபோன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளோம். இந்திய பிரதமரும், உள்துறை மந்திரியும் இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லை என்று கூறியதால் குடியுரிமை திருத்த மசோதாவை நாங்கள் ஆதரித்தோம்.

    எங்களது கூட்டணி கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. மாவட்ட அளவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×