search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறை
    X
    சிறை

    தேனி மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பேர் சிறையில் அடைப்பு

    தேனி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தேனி:

    தேனி மாவட்டம், போடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபக் தலைமையில் போலீசார் கடந்த மாதம் 27-ந் தேதி போடி அருகே உள்ள துரைராஜபுரம் காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது துரைராஜபுரம் காலனி, கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த அர்ஜூணன் (வயது22) என்பவர் டிராக்டரில் அனுமதியில்லாமல் மணல் திருடி வந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். மணல் திருட்டில் கைது செய்யப்பட்ட அர்ஜூணன் மீது ஏற்கனவே போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் மணல் திருட்டு வழக்கு இருந்துள்ளது. எனவே தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த அர்ஜூணனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண்தேஜஸ்வி பரிந்துரையின் பேரில், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.

    இதேபோன்று தேனி மாவட்டம், உத்தமபாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ராஜேஸ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட எதிரிகளான பொம்மையாசாமி (எ) பொம்மையன் என்பவரின் தங்கையுடன் கொலை செய்யப்பட்ட ராஜேஸ் அடிக்கடி பேசி தொந்தரவு செய்ததால் செல்வக்குமார் மற்றும் பொம்மையாசாமி (எ) பொம்மையன் ஆகிய இருவரும் சேர்ந்து ராஜேஸை கொலை செய்து விட்டதாக அவரின் உறவினர் முருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 19-ந் தேதி செல்வக்குமார், பொம்மையாசாமி ஆகிய 2 பேரும் போலீசார் கைது செய்து கோர்ட்டு மூலம் சிறையில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட செல்வக்குமார், பொம்மையாசாமி ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தேனி மாவட்ட எஸ்.பி. சாய்சரண்தேஜஸ்வி பரிந்துரையின் பேரில், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார்.

    மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×