search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிஎஸ்என்எல்
    X
    பிஎஸ்என்எல்

    தமிழகத்தில் 5 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வு

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 5,308 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
    சென்னை:

    மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஒவ்வொரு மாதமும் ஏற்பட்டு வருகிறது.

    அதனால் இந்நிறுவனத்தை எம்.டி.என்.எல். நிறுவனத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    மேலும் இந்த இரு நிறுவனங்களையும் சீரமைக்கவும் 4 ஜி சேவையை வழங்கவும், விருப்ப ஓய்வு திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்காக ரூ.68,751 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

    விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் கடந்த நவம்பர் 4-ந் தேதி முதல் இந்த மாதம் 3-ந் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 1.53 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இதன்படி விருப்ப ஓய்வு பெற தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 5,308 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 78, 569 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 50 சதவீதமாகும்.

    விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு இதுவரை பணியாற்றிய ஆண்டுகளுக்கு ஓர் ஆண்டுக்கு 35 நாட்கள் ஊதியம் வீதமும் மீதமுள்ள பணி ஆண்டுகளுக்கு ஒரு ஆண்டுக்கு 25 நாட்கள் வீதமும் ஊதியம் வழங்கப்படும்.

    விருப்ப ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 31-ந்தேதிக்குள் பணப்பலன்கள் கிடைத்து விடும்.

    இந்த நிலையில் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்தவர்களுக்கு தங்களது முடிவை மறுபரீசிலனை செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என ஊழியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
    Next Story
    ×