search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர் சாய்குமார் - சிறுவன் ஜேம்ஸ்
    X
    மாணவர் சாய்குமார் - சிறுவன் ஜேம்ஸ்

    மெரினா கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

    மெரினா கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    மெரினா கடலில் கண்ணகி சிலை பின்புறம் உள்ள பகுதியில் 8 சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். ஓட்டேரி மற்றும் நம்மாழ்வார்பேட்டை பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை கழிப்பதற்காக வந்திருந்த இந்த சிறுவர்கள் அலையில் நீந்தி மகிழ்ந்தனர்.

    அப்போது ஓட்டேரியை சேர்ந்த ஜேம்ஸ், நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த சாய்குமார் 2 சிறுவர்களும் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கினர். மற்ற சிறுவர்கள் 2 பேரையும் காப்பாற்ற முயற்சி செய்தனர்.

    ஆனால் முடியவில்லை. ஜேம்ஸ், சாய்குமார் இருவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    நேற்று மதியம் கடலில் மூழ்கிய இவர்களின் உடல் இன்னும் கரை ஒதுங்கவில்லை. உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மெரினா இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மற்றும் போலீசார் மீனவர்களின் துணையுடன் தேடி வருகிறார்கள்.

    கடலோர காவல்படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று 2 சிறுவர்களின் உடல்களும் கரை ஒதுங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடலில் மூழ்கியவர்களில் சாய்குமார் நம்மாழ்வார்பேட்டையில் பராக்கா தெருவில் வசித்து வந்தார். அங்குள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஜேம்ஸ், 7-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வந்தார்.

    சிறுவர்கள் இருவரும் கடலில் மூழ்கி பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×