search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்த நிலையில் மீண்டும் இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு 6 மாதத்திற்கும் மேலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்த நிலையில் மீண்டும் இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 4 ஆயிரத்து 443 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 4 ஆயிரத்து 843 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரியில் 4 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் என மொத்தம் 4 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.

    நடப்பாண்டில் கடந்த மாதம் 12-ந் தேதி 4-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை நீர்மட்டம் 35-வது நாளாக இன்றும் 120 அடியாக நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×