search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கு எண்ணும் மையத்தை திருவாரூர் கலெக்டர் ஆன்ந்த் ஆய்வு செய்த காட்சி.
    X
    வாக்கு எண்ணும் மையத்தை திருவாரூர் கலெக்டர் ஆன்ந்த் ஆய்வு செய்த காட்சி.

    உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் திருவாரூர் கலெக்டர் ஆய்வு

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருவாரூர்:

    திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட 258 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 32 கிராம ஊராட்சிக்கும், 16 ஊராட்சி ஒன்றிய வார்டுக்கும், 1 மாவட்ட ஊராட்சி வார்டு பதவிக்கும் தேர்தல் தேர்தல் நடைபெற உள்ளது.

    இதையொட்டி திருத்துறைப் பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டார். வாக்கு எண்ணும் அறை, வாக்குப்பெட்டிகள் வைப்பறை, சாய்தள வசதி, குடிநீர் , கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.

    அனைத்து வாக்குசாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தினை தொடர்ந்து கண்காணித்து தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், தாசில்தார் ராஜன்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×