search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    பெரியார் பஸ் நிலைய பகுதியில் 17-ந்தேதி மின் நிறுத்தம்

    பெரியார் பஸ் நிலைய பகுதியில் வருகிற 17-ந் தேதி மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    மதுரை:

    மதுரை மின் பகிர்மான தெற்கு செயற்பெறியாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை எல்லீஸ்நகர் துணை மின் நிலையத்தில் வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் எல்லீஸ்நகர், மகபூப் பாளையம், அன்சாரி நகர் 1-வது தெரு முதல் 7-வது தெருவரை, டி.பி.கே. ரோடு, ரெயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை ரோடு, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், எல்லீஸ்நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, போடி லைன், பைபாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, வசந்தநகர் பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

    இதேபோல் ஆண்டாள்புரம், அக்ரினி அபார்ட் மெண்ட், வசுந்தரா அபார்ட்மெண்ட், திடீர்நகர், பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ். மேலவெளி வீதி, மேலமாரட் வீதி, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால் ரோடு, காக்கா தோப்பு மற்றும் டவுன் ஹால் ரோடு சந்திப்பு முதல் மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×