search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வில்லிவாக்கத்தில் வாகனம் மோதி மூதாட்டி பலி

    வில்லிவாக்கத்தில் வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லிவாக்கம்:

    வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்தவர் வள்ளிம்மாள் (60). நேற்று மதியம் எம்.டி.எச்.சாலையிலுள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது பயங்கர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கொரட்டூர் அடுத்த பாடி பகுதியை சேர்ந்த குமண்ராம் (46) என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர்.

    Next Story
    ×