search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதீஷ்
    X
    சுதீஷ்

    தேமுதிக வேட்பாளர்கள் விரைவில் மனுதாக்கல்- சுதீஷ்

    தேமுதிக வேட்பாளர்கள் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று சுதீஷ் கூறியுள்ளார்.

    சென்னை:

    ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27, 30-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கான இடஒதுக்கீடு குறித்து சமீபத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் தே.மு.தி.க. போட்டியிடும் இடங்கள் குறித்தும் பேசப்பட்டது.

    தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. வருகிற 16-ந் தேதி நிறைவு பெறுகிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தே.மு.தி.க. வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வது எப்போது என்பது குறித்து அந்த கட்சியின் மாநில செயாலளர் சுதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்பட்டுள்ளபடி தே.மு.தி.க. வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

    அதற்கான பட்டியல் தயாராகி வருகிறது. இதற்கான அறிவிப்பை கட்சி தலைமை அறிவிக்கும். தே.மு. தி.க. வேட்பாளர்கள் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×