search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல்
    X
    தாக்குதல்

    குளித்தலையில் அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர் மோதல்

    குளித்தலையில் இன்று காலை நேர பிரச்சினை தொடர்பாக அரசு பஸ்களின் டிரைவர், கண்டக்டர் இடையே மோதல் ஏற்பட்டது.
    குளித்தலை:

    கரூரிலிருந்து இன்று காலை 7.10 மணிக்கு திருச்சி நோக்கி கும்பகோணம் அரசு கோட்ட பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் குளித்தலை பஸ் நிலையத்தில் சரியாக 7.13 நிமிடத்திற்கு வந்தது. வழக்கமாக இந்த பஸ் குளித்தலையில் 5 நிமிடம் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லும். 

    இதற்கிடையில் இன்று கோவையிலிருந்து தொண்டி செல்லும் இன்னொரு அரசு பஸ் திருச்சி பஸ் வந்தவுடன் வந்தது. இந்த பஸ்சும் திருச்சி வழியாகத்தான் இயக்கப்படுகிறது. தாங்கள் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லலாம் என நினைத்த அடுத்த நொடி இன்னொரு அரசு பஸ் வந்ததை கண்ட திருச்சி பஸ் டிரைவரும், கண்டக்டரும் ஆவேசத்துடன் பஸ்சிலிருந்து கீழே இறங்கினர். பின்னர் தொண்டி பஸ் கண்டக்டர், டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தள்ளு முள்ளு ஏற்படும் நிலை உருவானது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த டைம் கீப்பரும் தொண்டி பஸ் கண்டக்டரை கண்டித்தார். 

    மேலும் திருச்சி பஸ்சுக்கு முன்னதாக வந்த தனியார் பஸ் கண்டக்டரும் அவரை கடுமையாக திட்டினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    பின்னர் 3 பஸ்களும் ஒன்றன்பின் ஒன்றாக திருச்சி நோக்கி புறப்பட்டது. கரூரிலிருந்து திருச்சிக்கு புறப்பட்ட அரசு பஸ்சில் வழக்கமாக பெட்டவாய்த்தலை பகுதியிலிருந்து அதிக பயணிகள் ஏறுவார்கள். இன்று தொண்டி பஸ் போட்டிக்கு வந்ததால் குறைந்த அளவே பயணிகள் ஏறினர்.
    Next Story
    ×