search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த்
    X
    ரஜினிகாந்த்

    ரஜினி மன்றம் அறிக்கை வெளியிட தடை

    ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமையின்அனுமதி இல்லாமல் மன்ற நிர்வாகிகள் அறிக்கை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கடந்த 8ந்தேதி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

    அதில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மன்றத்தின் தலைவர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. எனவே, ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரையோ அல்லது கொடியையோ, தலைவரின் பெயரையோ, புகைப்படத்தையோ யாரும் பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதனை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற திருச்சி மாவட்ட செயலாளர் எம். கலீல் சார்பில் டிசம்பர் 9ந்தேதி மற்றொரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மன்றத்தினர் யாரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில், மன்றத்தின் மாநில நிர்வாகி சுதாகர் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தலைமையின் அனுமதி இல்லாமல் மன்ற நிர்வாகிகள் அறிக்கை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எந்த ஒரு அறிக்கையையும், சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×