search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலி
    X
    பலி

    தஞ்சை அருகே பள்ளத்தில் தவறி விழுந்து ஓட்டல் உரிமையாளர் பலி

    தஞ்சை அருகே பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து ஓட்டல் உரிமையாளர் பலியானார்.
    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் மூக்கன் செட்டித்தெருவை சேர்ந்தவர் ஹாஜாமைதீன்(52). இவர் தன் வீட்டு வாசலிலேயே சிறிய அளவில் இரவு நேர உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் நேற்று நண்பகல் வல்லம் அரசுப்பள்ளியில் எட்டாவது படிக்கும் இவருடைய மகனுக்கு மதிய உணவு கொடுப்பதற்காக சைக்கிளில் சென்றார். 

    வல்லம் தபால் நிலையம் அருகே உள்ள அருணாகுள சந்தில் சைக்கிளில் சென்ற போது சாலை சரியில்லாததால் நிலைதடுமாறிய அவர் கீழே தவறி விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் அடிப்பட்டதில் ரத்தம் வந்து மயக்கமாகி உள்ளார். சுயநினைவில்லாமல் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச் சைக்காக வல்லம் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். 

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

     வல்லத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக வல்லத்தில் உள்ள பல பகுதிகளிலும் சாலையில் குழிகள் தோண்டப்பட்டு வந்தன. பிறகு அந்த சாலைகள் சரி வர சீரமைக்கப்படவில்லை. இதனால் குண்டும் குழியுமான சாலைகளில் மக்கள் நடந்து கூட செல்ல முடியவில்லை. 

    இதே போன்ற சாலை சீரமைக்கப்படாமல் உள்ள அருணாகுள சந்தில் தான் உணவக உரிமையாளர் சைக்கிளில் செல்லும் போது தவறி விழுந்து இறந்ததாகவும் மேலும் உயிர் இழந்த அவரின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×