search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வெளிநாட்டில் இருந்து வாட்ஸ் அப்பில் பேசி ரூ.15 லட்சம் மோசடி

    வெளிநாட்டில் இருந்து வாட்ஸ் அப் மூலமாக பேசி ரூ.15 லட்சம் மோசடி செய்தது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    களியக்காவிளையை அடுத்த தையாலுமூடு, விராலிவிளை வீட்டை சேர்ந்தவர் ஆல்பர்ட் சிசில். இவரது மனைவி ஜெகாஜினி (வயது 47). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் ஊரை சேர்ந்த ஸ்டீபா என்பவரது செல்போன் வாட்ஸ்அப் மூலம் வாலிபர் ஒருவர் பேசினார். அவர் ஆங்கிலத்தில் பேசியதால், அந்த நபர் என்ன பேசுகிறார் என்பதை கேட்க என் கணவரிடம் செல்போனை கொடுத்தார்.

    எனது கணவர் வாட்ஸ்அப்பில் பேசியவருடன் ஆங்கிலத்தில் பேசினார். மறுமுனையில் பேசிய நபர், எனது கணவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கான விசா எடுத்து தருவதாகவும் கூறினார்.

    எனது கணவருக்கு அப்போது உடல் நலம் சரியில்லை. எனவே அவர் வெளிநாட்டுக்கு வர முடியாது என்று கூறினார்.

    இதையடுத்து வெளிநாட்டில் இருந்து பேசிய நபர், என் வீட்டு முகவரிக்கு சில பரிசு பொருட்கள் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் அது பற்றிய புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்பினார். அந்த பரிசு பொருட்கள் எங்களுக்கு வந்து சேரவில்லை.

    இதனால் எங்களை மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர், டெல்லி விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் சுங்க இலாகா அதிகாரிகள் பிடித்து வைத்திருப்பதாகவும், அதற்கு ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.

    இதனால் நாங்கள் அந்த நபரின் வங்கி கணக்குக்கு ரூ.30 ஆயிரம் பணம் அனுப்பினோம்.

    இவ்வாறு பல தவணைகளாக ரூ.15 லட்சத்து 85 ஆயிரம் அனுப்பி வைத்தோம். பின்னர் தான் நாங்கள் ஏமாந்தது தெரியவந்தது. இதனால் அந்த நபருக்கு அனுப்பிய பணத்தை திருப்பி கேட்டோம். அவர் பணத்தை திருப்பி தரவில்லை.

    இந்த மனவருத்தத்தில் கடந்த மே மாதம் எனது கணவர் இறந்து விட்டார். எனவே எனது கணவரை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணத்தையும் மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் லைசா தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இது தொடர்பாக லண்டனை சேர்ந்தவர் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×