search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரும்புகள்
    X
    கரும்புகள்

    சாணார்பட்டி பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு தயாரான கரும்புகள்

    சாணார்பட்டி பகுதியில் பருவமழை கைகொடுத்ததால் பொங்கல் பண்டிகைக்கு கரும்புகள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே சாணார்பட்டி, நத்தமாடிப் பட்டி, வீரசின்னம்பட்டி, அஞ்சுகுழிபட்டி, கிழவன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி தற்போது கரும்புகள் நல்ல விளைச்சல் கண்டு அறுவடைக்கு தயாராகி வருகிறது. இதுகுறித்து விவசாயி ஆண்டிச்சாமி கூறுகையில், 10 மாத பயிரான கரும்பு சாணார்பட்டி பகுதியில் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு வறட்சி காணப்பட்டதால் 4 முதல் 5 அடி வரையே கரும்பு வளர்ந்தது. இதனால் ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.500 வரை மட்டுமே விலை கேட்கப்பட்டது. பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் அதற்கான அறுவடை கூலிகூட கிடைப்பதில்லை. இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததால் 7 முதல் 8 அடி வரை வளர்ந்துள்ளது.

    எனவே ஒரு கட்டு ரூ.700 முதல் ரூ.800 வரை விலை போகும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர் என்றார்.

    Next Story
    ×