search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிபத்து (கோப்புப்படம்)
    X
    தீவிபத்து (கோப்புப்படம்)

    கார்த்திகை தீபவிளக்கு ஏற்றிய பெண் தீயில் கருகி பலி

    வேளச்சேரியில் கார்த்திகை தீபவிளக்கு ஏற்றிய பெண் தீயில் கருகி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேளச்சேரி:

    வேளச்சேரி விஜயநகர், 3-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுரேந்தர். மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுஜாதா (72).

    கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று இரவு சுஜாதா வீட்டில் விளக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது விளக்கில் எரிந்து கொண்டிருந்த தீ எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் பிடித்தது.

    இதில் தீயில் கருகிய சுஜாதா அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். பின்னர் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேளச்சேரி போலீசார் சுஜாதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர் கார்கில் நகர் முகிலன் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவர் வீட்டின் அருகே மாட்டு கொட்டகை அமைத்து மாடு மற்றும் உயர் ரக கோழிகள் வளர்த்து வருகிறார்.

    நேற்று மாலை கார்த்திகை தீபம் என்பதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ராக்கெட் பட்டாசு வெடித்தனர். இதில் ஒரு பட்டாசு மாட்டு கொட்டகையில் இருந்த வைக்கோல் மீது விழுந்து தீப்பிடித்தது.

    இதில் அங்கு கட்டப்பட்டிருந்த ஒரு கன்றுக்குட்டி 20-க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி இறந்தன. மேலும் 13 பசு மாடுகள், 4 கன்று குட்டிகளுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

    இதேப்போல் கார்த்திகை தீப விழாவையொட்டி விடப்பட்ட பட்டாசால் வண்ணாரப் பேட்டை, மதுரவாயல் உள்ளிட்ட 6 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.

    வேளச்சேரியில் பெண் ஒருவர் தீக்காயம் அடைந்தார்.
    Next Story
    ×