search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் மரணம்
    X
    பெண் மரணம்

    நெல்லையில் கார்-ஆட்டோ மோதல்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் மரணம்

    நெல்லையில் கார்-ஆட்டோ மோதிய விபத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பொட்டலை அடுத்த மலையன்குளத்தை சேர்ந் தவர் சண்முகவேல். இவருடைய மனைவி கனகமணி (வயது 55). இவர் அதே ஊரை சேர்ந்த பெண்களுடன் வயலில் நாற்று நடும் வேலை செய்து வந்தார்.

    இவரும் அதே பகுதியை சேர்ந்த சிங்காரி உள்பட 8 பெண்கள் நேற்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள அசுரம் கிராமத்துக்கு நாற்று நடும் பணிக்காக ஆட்டோவில் புறப்பட்டு சென்றார். ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த பூரண பரமேசுவரன் (27) என்பவர் ஓட்டினார்.

    ஆட்டோ காலையில் நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள தெற்கு புறவழிச்சாலையில் வந்தது. அந்த நேரத்தில் நெல்லை சந்திப்பு பாலபாக்கிய நகரை சேர்ந்த ஒருவர் தனது காரில் புதிய பஸ்நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். மேலப்பாளையம் சிக்னலில் ஆட்டோ கடக்க முயன்ற போது கண்ணிமைக்கும் நேரத்தில் காரும், ஆட்டோவும் மோதிக் கொண்டன.

    இதில் ஆட்டோ அங்கிருந்த போலீஸ் நிழற்குடையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த கனகமணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மலையன்குளம் பகுதியை சேர்ந்த சிங்காரி (36), காளியம்மாள் (70), ராசம் மாள் (50), இசக்கியம்மாள் (75) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் பலியான கனகமணி உடலை மீட்டு பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த 4 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக் காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை சிங்காரி பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. காளியம்மாள் உள்பட மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி, சப்-இன்ஸ் பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×