search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்த போது எடுத்த படம்.
    X
    அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்த போது எடுத்த படம்.

    நித்யானந்தா மாதிரி தீவு வாங்கி மு.க.ஸ்டாலின் முதல்வராகலாம்- அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

    நித்யானந்தா போன்று ஒரு தீவை வாங்கி அங்கு வேண்டுமானால் மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆகலாம் என்றும் தமிழகத்தில் முதல்வராக முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
    சென்னை:

    ராஜாஜியின் சிலைக்கு மாலை அணிவித்த பின்அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியுரிமை சட்டத்தால் எந்த விதத்திலும் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு இல்லை. இதுகுறித்து நேற்றே அ.தி.மு.க. கூறியுள்ளது.

    எதிர்க்க வேண்டிய வி‌ஷயங்களை எதிர்த்து, ஆதரிக்க வேண்டிய வி‌ஷயங்களை அ.தி.மு.க. ஆதரித்து வருகிறது. இச்சட்டத்தால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு இல்லை என அமைச்சர் கூறியிருக்கிறார். எதையும் ஆராயாமல் அ.தி.மு.க. முடிவு எடுக்காது.

    தி.மு.க. ஒரு குழப்பமான கட்சி. நீதிமன்றம் சென்று தேர்தலை நிறுத்த முயற்சித்தனர். தீர்ப்பு வந்த பின் அதனை ஏற்பதாக கூறிய ஸ்டாலின், தற்போது நீதிமன்றம் சென்றுள்ளார்.

    உள்ளாட்சி தேர்தலை வரவேற்பதாக கூறினார். அதே நேரத்தில் நீதிமன்றம் சென்று மக்களை ஏமாற்றும் வேலையை ஸ்டாலின் செய்து வருகிறார்.

    மு.க.ஸ்டாலின்

    முதல்வர் கனவோடு தான் ஸ்டாலின் உள்ளார். அவர் நித்யானந்தா போன்று ஒரு தீவை வாங்கி அங்கு வேண்டுமானால் முதல்வராக ஆகலாம். தமிழகத்தில் ஒரு போதும் அவரால் முதல்வராக முடியாது.

    உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுமையாக தான் அ.தி.மு.க. பின்பற்றி வருகிறது.

    தோல்வி பயம் காரணமாக ஏதேனும் செய்து தேர்தலை நிறுத்த முடியுமா என்று பார்த்து வருகின்றனர். தி.மு.க. கரை சேராத கப்பல். 2021 தேர்தலில் தோல்வி அடையும் என்று தெரிந்ததால் தான் இதுபோன்ற நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

    உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் தேர்தல் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

    குருமூர்த்தி விமர்சனத்திற்கு, எதிர் விமர்சனம் அ.தி.மு.க. தான் செய்து வருகிறது. அ.தி.மு.க.வை விமர்சனம் செய்தால் தான் பெரிய ஆள் ஆக முடியும் என்று அவர் பேசி வருகிறார். அவர் அரசியலில் கத்துக்குட்டி, சர்ச்சையை உருவாக்கி விளம்பரம் தேட வேண்டும் என்று அவர் பேசி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×