search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி மலைக்கோட்டை
    X
    திருச்சி மலைக்கோட்டை

    கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மலைக்கோட்டை உச்சியில் நாளை மகாதீபம்

    கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மலைக்கோட்டை உச்சியில் நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது.
    மலைக்கோட்டை:

    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இந்த கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி நாளை மாலை 6 மணி அளவில் மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    இதற்காக அந்த கோபுரத்தில் பிரமாண்ட செப்புக் கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியை திரியாக வைத்து, 900 லிட்டரில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை ஊற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை ஏற்றப்படும் இந்த தீபம் தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×