search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    உள்ளாட்சி தேர்தலில் போட்டி இல்லை- கமல்ஹாசன் அறிவிப்பு

    உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதையொட்டி கிராம பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்த ஒவ்வொரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறது. அ.தி.மு.க. - தி.மு.க. இரு கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிதலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது. இந்த தேர்தலில் ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட வியாபார பங்கீடு மட்டுமே தேர்தலில் அரங்கேறும். இரு கட்சிகள் எழுதி, இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்த பாத்திரத்தையும் ஏற்கப்போவதில்லை. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்குபெறுவதால் கிட்டக்கூடிய முன்னேற்றம் சொற்பமானது. மக்கள் நலன் நோக்கிய பயணமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் இருக்கப்போவதில்லை.  

    2021தேர்தலில் ஆட்சியை பிடிப்பதே நம் லட்சிமாக இருப்பின் வெற்றி நிச்சயம். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×