search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டியளித்த காட்சி.
    X
    சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டியளித்த காட்சி.

    உத்தர பிரதேசம் கொலைக்களமாக மாறிக்கொண்டு இருக்கிறது- ப. சிதம்பரம் வேதனை

    பெண்களுக்கான கொலைக்களமாக உத்தர பிரதேசம் மாறிக்கொண்டு இருக்கிறது என்று சென்னை விமானநிலையத்தில் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
    சென்னை:

    ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் 106 நாட்களுக்கு பிறகு கடந்த 4-ம் தேதி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான ப.சிதம்பரம் இன்று மாலை சென்னை விமானநிலையம் வந்தார்.

    அங்கு அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம் கூறியதாவது:-

    இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. பொருளாதார சூழலை பொறுத்தவரை மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது.

    நாட்டின் பல பகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றன.  என்னுடைய மனஉறுதியை குலைக்க வேண்டும் என்பதற்காகவே சிறையில் அடைத்தனர்.  ஆனால் என்னுடைய மனஉறுதியை குலைக்க முடியாது.

    பாஜகவை எதிர்ப்பதில் தமிழக மக்களின் விழிப்புணர்வு நாடு முழுவதும் பரவ வேண்டும். தமிழக மக்கள் காட்டும் எச்சரிக்கையை அனைத்து மாநில மக்களும் காட்டினால் இந்தியா சுதந்திர நாடாக மாறும்.

    ஒருவரின் சுதந்திரம் மறுக்கப்பட்டால் அனைவருக்கும் மறுக்கப்பட்டதாகும். பெண்களுக்கான கொலைக்களமாக உத்தரப்பிரதேசம் மாறிக்கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×