search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கின் குற்றவாளிகள்
    X
    அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கின் குற்றவாளிகள்

    அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கின் விசாரணை நிறைவு

    அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி மஞ்சுளா ஒத்திவைத்தார்.
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை, அதே குடியிருப்பில் வேலை பார்த்து வந்த காவலாளி பழனி (வயது 40), பிளம்பர் ஜெய்கணே‌‌ஷ் (23), லிப்ட் ஆபரேட்டர்கள் தீனதயாளன் (50), பாபு (36) உள்பட 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை இவர்கள் ஒருவர் பின் ஒருவராக அந்த சிறுமியை தங்களது இச்சைக்கு பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.

    இதுதொடர்பாக அயனாவரம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    புழல் சிறை

    இந்த வழக்கில் விசாரணையை முடித்து போலீசார் குற்றப்பத்திரிகையை சென்னை மகளிர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது கைதானவர்களில் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாபு என்பவர் இறந்து போனார்.

    இதைத்தொடர்ந்து மற்ற 16 பேர் மீதான வழக்கு விசாரணை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி மஞ்சுளா நேற்று ஒத்திவைத்தார்.

    Next Story
    ×