search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறை
    X
    சிறை

    டீக்கடையில் லாரி புகுந்து 3 பேர் பலி- லாரி டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

    டீக்கடையில் லாரி புகுந்ததில் 3 பேர் பலியான வழக்கில் லாரி டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    கோவை:

    கோவை பீளமேட்டில் உள்ள குடோனில் இருந்து கடந்த 20.6.2012 அன்று ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றது. இதனை டிரைவர் லட்சுமணன்(31) ஓட்டி சென்றார்.

    இந்த லாரி சிட்கோ அருகே சென்றபோது முன்னால் சென்ற வேனை முந்தி செல்ல டிரைவர் முயன்றார். அப்போது எதிரே பஸ் வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க லாரி டிரைவர் வண்டியை வலது புறம் திருப்பினார். ஆனாலும் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் டீக்கடையில் நின்று கொண்டு இருந்த கோபால் (40), ஹரி கிருஷ்ணன் (54), நாராயணன் குட்டி (55) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள்.

    லாரி டிரைவர் லட்சுமணன் மற்றும் கிருஷ்ண மூர்த்தி, ஆறுமுகம், சிவக்குமார் ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் லட்சுமணனை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஜே.எம். எண்.8 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராமதாஸ் , லாரி டிரைவர் லட்சுமணனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும்,ரூ. 1,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பானுமதி ஆஜரானார்.

    Next Story
    ×